என் விவிலிய வாசக தடம்
அன்றாடம் பாடம் படிப்படித்திலும், பொழுதுபோக்கில் உன் இதயத்தை செலுத்துவதிலும் நீ ஆர்வம் கொள்வதுபோல், நம் ஒப்பற்ற செல்வமாகிய இயேசுவை நீ அறிந்து கொள்ளவும், அவரது வழியில் நடக்க வழிவகுக்கும் இறைவார்த்தைகளை வாசிக்கவும் அனுதினமும் முயற்சிக்க வேண்டும்; உனது இந்த ஆன்மீக பயணத்துக்கு திருவிவிலியம் மிகவும் இன்றியமையாதது; இத்திருவிவிலியத்தை நாள்தோறும் வாசிக்கவும், வாசிப்பதில் நம்பிக்கை கொள்ளவும், நம்புவதை அறிவிக்கவும், அறிவிப்பதை வாழ்வாக்கவும் உறுதி கொள்! இந்த விவிலிய தடமானது உனக்கு இம்முயற்சியில் உதவியாய் இருக்கும்; புதிய ஏற்பாட்டில் தொடங்கி அதை முடித்தபின், பழைய ஏற்பாட்டு நூல்களை வாசித்தல் சிறந்தது; இறைவார்த்தையின் வெளிச்சத்தில் (திரு.பா 119:105) அமைந்த இந்த தொடர் வாசிப்பு பயணம் உனது வாழ்வை வளமாகட்டும்! (ஏசாயா 55:10) அறநெறி ஒழுக்கத்தால் செம்மையாக்கட்டும்! (எபி 4:12) இதன் வழியாக இறைஞானத்தையும் ஆற்றலையும் தருகின்ற ஒரு திருக்கருவியாக உனது வாழ்வு அமைந்திட உன்னை இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறோம்!

